தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துக் கட்சியினருடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை

2 mins read
991a37e2-4270-42b7-b379-fa4b2f2ee42c
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தி உள்ளார்.

தோ்தல் ஆணையத்தின் சாா்பில், ஒவ்வோர் ஆண்டும் திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்காளா் பட்டியலைத் திருத்துவதற்காக, இப்போது புழக்கத்தில் உள்ள பட்டியல், வரைவுப் பட்டியலாக வெளியிடப்பட்டு, அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

அதன்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் வரைவுப் பட்டியல் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

மேலும், வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி டிசம்பர் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதில், நவம்பா் மாதத்தில் 4 நாள்கள் சிறப்பு முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி, தாயகம் கவி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், இன்பதுரை, காங்கிரஸ் சார்பில் நவாஸ், சந்திரமோகன், பாஜகவில் கராத்தே தியாகராஜன், சௌந்தரராஜன் கலந்துகொண்டுள்ளனர்.

அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர் வரைவுப் பட்டியல் விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளின்போது மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள், சிறப்பு முகாம்களின்போது அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு ஆகியன குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்