குளவி கொட்டி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

குளவி கொட்டி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

1 mins read
accd656d-ca99-4700-8a2b-f307259ee26a
படம்: - தமிழ் முரசு

செங்கல்பட்டு: வண்டலூர் அருகேயுள்ள முருகமங்கலத்தில் 3ஆம் வகுப்புப் படித்து வந்த 8 வயதுச் சிறுவன் தஸ்வின் குளவி கொட்டியதால் உயிரிழந்தான்.

தஸ்வின், தன் வீட்டின் பின்புறம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அங்குள்ள பனைமரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த ராட்சதக் குளவி ஒன்று சிறுவன் தஸ்வினை கொட்டியது.

வலி தாங்கமுடியாமல் அலறித் துடித்த தஸ்வினை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தஸ்வின் உயிரிழந்தான். சிறுவன் உயிரிழந்த சம்பவம் கீரப்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்