சென்னை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை சென்னைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வெள்ளிக்கிழமை (27.10.2023) பங்கேற்கிறார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி சென்னை விமானநிலையம் உள்ளிட்ட பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 1,000 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.