சென்னை: “நீண்ட கடற்கரைகளைக் கொண்ட நாடு இந்தியா. கடல்சார் வளங்கள் மூலம் இந்தியாவின் வணிகமும் வளர்ச்சியும் பெருகி வருகிறது.
மேலும், நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு கடல்சார் வளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்று இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த வியாழக்கிழமை சென்னையில் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு உரையாற்றிய போது தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வியாழக்கிழமை சென்னை வந்தடைந்தார். முதல் அமைச்சர் ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் விமானநிலையத்தில் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆளுநர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

