அனுமதி பெறாத விளம்பர பலகைகள் அகற்றம்

அனுமதி பெறாத விளம்பர பலகைகள் அகற்றம்

1 mins read
206b9529-08fc-494c-b7be-50a308dca664
படம்: - தமிழ்முரசு

சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி அகற்றப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மொத்தம் 247 விளம்பரப்பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

உரிமம் இல்லாமல் விளம்பரப் பலகை வைத்தால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

மழைக் காலங்களில் விளம்பரப் பலகைகள் மூலம் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். விளம்பரப் பலகை வைப்பவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் நினைவூட்ட்டினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்