பால் விநியோக நேரத்தை நீட்டிக்க கோரிக்கை

பால் விநியோக நேரத்தை நீட்டிக்க கோரிக்கை

1 mins read
8e531337-04de-417a-9432-fede4d759492
படம்: - தமிழ்முரசு

மதுரை: ஆவின் மாதாந்ர அட்டைதாரர்களுக்கு பால் விநியோகிக்கப்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக ‘த இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

மாதாந்ர அட்டைதாரர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நேரத்தை காலை 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சில இடங்களில் அட்டைதாரர்களுக்கு காலை 6.30 மணி வரை மட்டுமே பால் விநியோகம் செய்யப்படுவதாகவும் அதன் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு பால் வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

அதைத்தொடர்ந்து பால் நிலையத்தில் விநியோக நேரத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்ததாக நாளிதழ் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்