‘விண்ணைத் தொடுகிறது வெங்காயத்தின் விலை’

‘விண்ணைத் தொடுகிறது வெங்காயத்தின் விலை’

1 mins read
30676768-eadb-455d-a386-fe96e8f9b5b6
ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை களின் முதல் பணியாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தைச் சந்தை களுக்கு கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை ஒன்றில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.75 என்ற உச்சத்தை அடைந்திருக்கிறது என்றும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றும் ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.

“வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும்; ஆனால், இப்போது வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும் அளவுக்கு விலை அதிகரித்து விட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

“கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ.25 - 30 என்ற அளவில் இருந்த பெரிய வெங் காயத்தின் விலை கடந்த சில நாள்களில்தான் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

“தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. வெங்காயம் அதிகம் விளையும் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டிருப் பதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

“வெங்காயத்தின் விலை நிலையில்லாமல் எட்ட முடியாத உயரத்திற்கு அதிகரிப்பதற்கும், அதலபாதாளத்திற்குத் தாழ் வதற்கும் காரணம் அதற்கான விலை நிர்ணயிக்கப்படாதது தான்,” என்று ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்