போதைக் காளான் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட ஐவர் கைது

1 mins read
e2f6749d-ec82-4a44-a94e-7087d1e760d2
பறிமுதல் செய்யப்பட்ட போதை காளான். - படம்: ஊடகம்

திண்டுக்கல்: போதை காளான்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்த இரு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேரை கொடைக்கானல் காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் கூரியர் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு போதை காளான்களை அனுப்பி வைத்துள்ளனர்.

கொடைக்கானலுக்கு வரும் வெளி மாவட்ட, வெளி மாநில சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து ஒரு கும்பல் போதை காளான்களை விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து காவல்துறை அந்தக் கும்பலைப் பிடிக்க திட்டமிட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதை காளான் எனப்படும் ‘மேஜிக் மஷ்ரூம்’ விற்பனை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தது. இளையர்கள் இவற்றை அதிகளவில் வாங்கிப் பயன் படுத்தி வந்தனர்.

போதை காளான்களை முட்டை, ரொட்டியில் வைத்து சாப்பிட்டால் போதை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங் களில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணி களில் பலர் அங்குள்ள வசதியான தங்கு விடுதிகளில் தங்குகின்றனர். வசதி படைத்த இவர்களைக் குறிவைக்கும் போதைக் காளான் கும்பல், நேரடியாகச் சந்தித்து போதைக் காளான்களை விற்பனை செய்து வந்தது.

விருப்பம் உள்ளவர்களுக்கு தபால் மூலம் வெளி மாநிலங் களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக இரு பெண்கள் உள்ளிட்ட ஐந்து காவல்துறை கைது செய்துள்ளது.

போதைக் காளான் விற்பனையில் பல லட்சம் ரூபாய் புழங்குவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்