சிவகாசி: தலைநகர் புதுடெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால், சிவகாசி ஆலைகளில் பட்டாசுகள் பேரளவில் தேக்கமடைந்திருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை எவ்வாறு விற்பது எனத் தெரியாமல் தவிப்பதாக பட்டாசு ஆலை நிர்வாகத் தரப்புகள் கூறியுள்ளன.
டெல்லியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் பட்டாசு ஆலை விபத்தை காரணம் காட்டி, விற்பனை உரிமம் வழங்க மறுப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கர்நாடகாவுக்கு அனுப்ப வேண்டிய பட்டாசுகளை மற்ற மாநிலங்களுக்கு குறைந்த விலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் நிலவுவதாகவும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
பல்வேறு காரணங்களால் சிவகாசியில் கடந்த ஆண்டைவிட பட்டாசு விற்பனை சுமார் 20 விழுக்காடு அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

