தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கீழடி, வெம்பக்கோட்டையில் அடுத்தகட்ட அகழாய்வுப் பணி

1 mins read
0ed7dc8b-ba51-45c8-80f5-a63925b047be
தங்கம் தென்னரசு. - படம்: ஊடகம்

விருதுநகர்: கீழடி, வெம்பக்கோட்டையில் விரைவில் அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படும் என தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பை தமிழ் ஆர்வலர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.

ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தமிழ் வளர்ச்சி மற்றும் அகழாய்வு உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதல்வர் தனி கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

“வெம்பக்கோட்டை அகழாய்வில் 4,600 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு, அவற்றுள் 2,600 பொருள்கள் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டு அனைத்து பொருள்களும் காட்சிப்படுத்தப்படும்,” என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

தமிழ் சமூகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் நாகரிகம் குறித்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல தொடர் கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்