சென்னை: தீபாவளிப் பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில், தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அத்துடன் பசுமைப் பட்டாசுகளை தயாரிக்கவும் வெடிக்கவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில், தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியன்றும் கடந்த ஆண்டைப் போல் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.