நிர்வாணப்படுத்தி இளையர்கள் மீது தாக்குதல், அறுவர் கைது

நிர்வாணப்படுத்தி இளையர்கள் மீது தாக்குதல், அறுவர் கைது

படம்: ஊடகம்

01 Nov 2023 - 9:24 pm

1 mins read

நெல்லை மாவட்டத்தில் சாதியைக் கேட்டு இளையர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞர்கள் மனோஜ், மாரியம்மன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைதானவர்கள் மீது வன்கொடுமை, வழிப்பறி, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மணி மூர்த்தேஸ்வரம் ஆற்றுப்பகுதியில் சாதியைக் கேட்டு பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தங்களை நிர்வாணப்படுத்தி, தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். அத்துடன், தங்களிடம் இருந்த 5000 ரூபாய், தங்களின் செல்போன், வெள்ளிச் சங்கிலி ஆகியவற்றையும் அவர்கள் பறித்துச் சென்றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கஞ்சா போதையில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.