தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிகரிக்கும் ஆடு விற்பனை

1 mins read
d937696b-95e8-462f-af77-866a3ee407b2
படம்: - தமிழக ஊடகம்

தென்காசி: தீபாவளிப் பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று ஆடு, கோழி, மீன் என அசைவ உணவுகளுக்கான தேவை அதிகமாக இருக்கும்.

இதனால் இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான ஆடுகளை இப்போதே வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள சந்தை வழக்கம்போல் வியாழக்கிழமை கூடியது.

இதில் பாவூர்சத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வணிகர்கள் ஏராளமான ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

அவற்றை இறைச்சி கடைக்காரர்களும் பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது.

ஆடுகளின் விலை ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கோடி ரூபாய் வரையில் ஆடு விற்பனை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்