பெண்ணை ‘ஆன்டி’ என அழைத்தவர்மீது வழக்கு

1 mins read
3ee0faca-e0a9-44e6-83fb-559dd114b462
மாதிரிப்படம்: - தமிழக ஊடகம்

சென்னை: பெண் பயணியை ‘ஆன்டி’ என்று அழைத்த மாநகரப் பேருந்து நடத்துநா்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நிா்மலா தேவி என்பவர் அண்மையில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்தார். அவரிடம் பேருந்து நடத்துநா் காா்த்திக் ‘எங்க போறீங்க ஆன்டி’ என்று கேட்டார். அதற்கு, எப்படித் தன்னை ‘ஆன்டி’ என்று அழைக்கலாமென நிர்மலா ஆட்சேபம் தெரிவித்தார்.

ஆனாலும் விடாத கார்த்திக், மீண்டும் சக பயணிகள் முன்னிலையில் நிர்மலாவை ‘ஆன்டி’ என்று அழைத்தார். இதனால் அதிருப்தி அடைந்த அப்பெண், பேருந்திலுள்ள பெண்கள் உதவிக்கான அவசரகாலப் பொத்தானை அழுத்தியதுடன், தன் கணவருக்கும் தகவல் தெரிவித்தார்.

பின்னர் சக பயணிகளுக்கு முன்னிலையில் தன்னை அவமரியாதையாகப் பேசியதாகக் கூறி, கார்த்திக்மீது காவல் நிலையத்திலும் புகாா் செய்தார். அதனைத் தொடர்ந்து, காா்த்திக் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அவரைக் கைதுசெய்யாதபோதும் அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்