வீடு கட்ட, பழைய கட்டடங்களை இடிக்க அனுமதிக் கட்டணம் 100% உயர்வு

வீடு கட்ட, பழைய கட்டடங்களை இடிக்க அனுமதிக் கட்டணம் 100% உயர்வு

படம்: தமிழக ஊடகம்

03 Nov 2023 - 9:09 pm

1 mins read

சென்னை: சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான அனுமதிக் கட்டணம் 100 விழுக்காடு உயர்ந்துள்ளது. பழைய கட்டடங்களை இடிப்பதற்கான அனுமதிக் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கல்வி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் கட்டடங்களுக்கும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 1,000 சதுர அடிக்கு மேல் கட்டப்பட்டும் ஒவ்வொரு 100 சதுர அடிக்கும் ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 100 சதுர அடிக்கு வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் தற்போது இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கிணறு, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவருக்கான அனுமதிக் கட்டணமும் இருமடங்காக உயர்ந்துள்ளது.

எனினும், 1,000 சதுர அடிக்குள் வீடு கட்டுவோர்க்கு ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும்.

இக்கட்டண உயர்வு அறிவிப்பு வரும் நவ.10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்