‘மாணவர்களிடம் கையெழுத்து பெறுவதில் தவறில்லை’

1 mins read
592ddcd9-8bf2-492e-8098-c51dfdb3f9fb
அன்பில் மகேஸ். - படம்: ஊடகம்

தஞ்சாவூர்: நீட் தேர்வுக்கு எதிராக அரசுப் பள்ளி மாணவர்களிடம் கையெழுத்துப் பெறுவதில் எந்தவித தவறும் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஏழை, எளிய பள்ளி மாணவர்களால் தனியார் கல்வி மையங்களில் பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி படிக்க இயலாது என தஞ்சையில் செய்தியாளர் களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

“நீட் தேர்வு பயிற்சி மையத்தை செப்டம்பர் மாதமே தொடங்கிவிட்டோம். இன்னொரு பக்கம் நாங்கள் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

“அரசுப் பள்ளி மாணவர் களிடம் கையெழுத்து வாங்குவதில் தவறில்லை. எல்லாரிடமும் வாங்கலாம். ஒவ்வோர் அரசாங்கத்துக்கும் தங்களுடைய கருத்தை சொல்வதற்கு உரிமை உண்டு என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது,” என்றார் அன்பில் மகேஸ்.

குறிப்புச் சொற்கள்