நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த ரவுடி கைது

நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த ரவுடி கைது

படம்: ஊடகம்

07 Nov 2023 - 9:30 pm

1 mins read

சென்னை: கையில் சிற்றுண்டி டப்பாவுடன் சுற்றித் திரிந்த ஆடவரால் சென்னையில் பரபரப்பு நிலவியது. இதுதொடர்பாக பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் அந்த ஆடவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வில்லிவாக்கம் பகுதியில் மனைவியுடன் ஏற்பட்ட மோதலால் கோபமடைந்த ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றித் திரிந்ததாக காவல் துறைக்கு புகார் வந்தது. விரைந்து சென்ற காவல் துறையினர் அந்த ஆடவரைக் கைது செய்தனர்.

பின்னர் அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது சிறிய சிற்றுண்டி டப்பா ஒன்று கண்டெடுக்கப்பட்டது. காவல் துறையினர் அதை திறக்க சிரமப்பட்டபோது அதில் நாட்டு வெடி கண்டு இருப்பதாக அந்த ஆடவர் தெரிவித்தார்.

பின்னர் போலீஸாரை ஏமாற்றி அங்கிருந்து அவர் தப்பி ஓடி விட்டார். எனினும் அவர் பின்னர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெயர் கார்த்தி (27 வயது) என்பது தெரியவந்தது. கார்த்தி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, எதிரிகளால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுவதாகவும் அதனால் தான் நாட்டுவெடி குண்டுகளை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்