சென்னை: வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் கடந்த மூன்று நாள்களாக ஓய்வில் இருந்ததாகவும் அமைச்சர் கூறியதாக தினகரன் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
முதல்வருக்கு தொடர்ந்து காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சில நாள்கள் ஓய்வில் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

