வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்வு

வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்வு

1 mins read
78586979-8a50-451a-94c5-1c380d570a7b
வைகை அணை. - படம்: ஊடகம்

மதுரை: வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததை அடுத்து, 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 51 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், அண்மைய சில நாள்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாக வேகமாக உயர்ந்தது.

தற்போது அணையின் நீரமட்டம் 69 அடியை எட்டியதால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இதற்காக அணையில் இருந்த சங்கொலி மூன்று முறை பலமாக ஒலிக்கப்பட்டது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தின் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்