மாமல்லபுரம் சிற்பங்களைத் தொட்டு உணர்ந்து பரவசமடைந்த பார்வையற்ற வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்

1 mins read
7bd88b11-9650-4611-9a67-7e980483a079
பார்வையற்ற சுற்றுலாப் பயணிகள். - படம்: ஊடகம்

செங்கல்பட்டு: மாமல்லபுரத்துக்கு வருகை தந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆறு கண்பார்வையற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தின் ஆகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் விளங்குகிறது. இங்கு ஏராளமான வெளிநாட்டவர்கள் சுற்றுலா வந்து செல்கின்றனர்.

மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள், அழகிய கடற்கரை கோவில் ஆகியவற்றை நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.

இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து வந்த கண்பார்வையற்ற சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்தை வலம் வந்தனர். அங்கிருந்த அனைத்து சிற்பங்களையும் அவர்கள் தங்கள் கைகளால் தொட்டு உணர்ந்து ரசித்தனர்.

அந்த சிற்பங்கள் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதை அறிந்து அவர்கள் வியந்தனர். இதையடுத்து அவர்களுக்கு மாமல்லபுரம் சிற்பங்களின் பெருமையை விளக்கும் ஒலி நாடாக்களை அங்குள்ள சுற்றுலா வழிகாட்டிகள் இலவசமாக வழங்கினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்