சென்னை: ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் குண்டர் சடத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 25ஆம் தேதி ஆளுநர் மாளிகை எதிரே நின்றபடி பெட்ரோல் குண்டுகளை வீசினார் கருக்கா வினோத். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்நிலையில், ஏற்கெனவே இருமுறை பெட்ரோல் குண்டுகளை வீசியதாக அவர் கைது செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

