சென்னை: சட்டவிரோதமாக கருக்கலைப்பு, போதை தரக்கூடிய மாத்திரைகளை விற்பனை செய்த 117 மருந்து கடைகள் மீது மருந்து கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக எழுந்த தொடர் புகார்களை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மருந்து கடைகளில்தான் இவ்வாறு சட்டவிரோதமாக மாத்திரைகள் விற்கும் கடைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மருந்து கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
“மருந்து கடைகளில் விற்பனை செய்யும் மருந்து, மாத்திரைக்கான ஆவணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக, கருக்கலைப்பு, போதை தரக்கூடிய மாத்திரை விற்பனை குறித்த ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்,” என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆறு மருந்து கடைகளின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

