சிவகாசியில் ரூ.6,000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனை

1 mins read
3e4f356e-5255-401b-9b06-b66b6a5a56dc
சிவகாசி பட்டாசு ஆலை ஒன்றில் தொழிலாளர்கள். - படம்: ஊடகம்

சிவகாசி: இம்முறை தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்றுத் தீர்ந்தன.

முன்னதாக பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு பட்டாசு உற்பத்தியில் 10% பின்னடைவு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

காலநிலை பாதிப்பு, உற்பத்தியில் தொய்வு, பட்டாசு தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் போன்றவற்றால் வியாபாரிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டனர்.

மேலும், தற்காலிக பட்டாசு விற்பனைக்கு உரிமம் அளிக்கவும் அரசு அதிகாரிகள் தரப்பில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

இதன் மூலம் கடந்த ஆண்டைவிட இம்முறை விற்பனையில் ரூ.50 கோடி அளவுக்குச் சரிவு ஏற்பட்டது. எனினும் நாடு முழுவதும் பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டன. எனினும், பேரிழப்பு ஏற்படவில்லை என பட்டாசு ஆலை உரிமையாளர்களும் வணிகர்களும் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்