தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் காற்று மாசுபாடு அதிகரிப்பு: தரக்குறியீட்டில் 250 புள்ளிகளாகப் பதிவு

1 mins read
3720ff00-94ba-47f7-bd92-c7a154b2680a
சென்னையில் பல இடங்கள் புகைமூட்டத்துடன் காட்சியளித்தன. - படம்: ஊடகம்

சென்னை: கடந்த இரு நாள்களாக தொடர்ந்து வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சென்னையில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது.

சென்னை மாநகரில் ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு அபாயக்கட்டம் எனக் கருதப்படும் வகையில் 250 புள்ளிகளாக அதிகரித்தது.

மணலி பகுதியில் காற்றுத் தரக்குறியீடு 322 புள்ளிகளாகவும் ஆலந்தூரில் 256ஆகவும், வேளச்சேரியில் 308ஆகவும், ராயபுரம் பகுதியில் 232ஆகவும் பதிவாகி இருந்தன.

பல்வேறு பகுதிகள் சுவாசிக்க தகுதியற்ற இடங்களாக மாறி உள்ளதாக மத்திய, மாநில அரசுகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக ஏஷியா நெட் தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்