தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதையை ஒழிக்காமல் தமிழகத்துக்கு புதிய விடியல் பிறக்காது: ராமதாஸ்

1 mins read
3477ed59-8a4d-4899-a638-34642a79fced
ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்துவதுடன் கஞ்சா புழக்கத்தையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

போதையை ஒழிக்காமல் தமிழகத்துக்குப் புதிய விடியல் பிறக்காது என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. அரசு மகளிர் உரிமைத் தொகையாக வழங்கிய தொகை ரூ.1,138 கோடி என்றால் தீபாவளியை ஒட்டி நடந்துள்ள மதுவிற்பனையின் அளவு ரூ.633 கோடி என ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.

“தீபாவளி வேளையில் மது போதையால் நிகழ்ந்த விபத்துகள், கொலை சம்பவங்களில் இருபது பேர் உயிரிழந்துவிட்டதாக காவல் துறையை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றன.

“சென்னையில் நடந்துள்ள விபத்து உள்ளிட்ட பல நிகழ்வு களுக்கு மது, கஞ்சா போதைதான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

உயிர்க்கொல்லி மதுவையும் கஞ்சாவையும் ஒழிக்க வேண்டும் என்பதற்கு இதைவிட வலிமையான காரணங்கள் இருக்க முடியாது என ராமதாஸ் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மது மட்டுமே ஒற்றை போதை ஆதாரமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா போதை கலாசாரம் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிறது. குக்கிராமங்களின் சந்து பொந்துகளில் கூட கஞ்சா தடையின்றி கிடைக்கிறது. பால் மணம் மாறாத சிறுவர்கள்கூட கஞ்சா போதைக்கு அடிமையாகும் அவலம் ஏற்பட்டிருக்கிறது,” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்