இருசக்கர வாகனங்களில் வேகமாகச் சென்று சாகசம்: மூன்று இளையர்கள் கைது

இருசக்கர வாகனங்களில் வேகமாகச் சென்று சாகசம்: மூன்று இளையர்கள் கைது

1 mins read
7eb40a74-4590-4fa2-89e1-a1c34efbec83
இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்று சாகசத்தில் ஈடுபட்ட இளையர்கள். - படம்: ஊடகம்

தென்காசி: இருசக்கர வாகனங்களில் வேகமாகச் சென்று சாகசங்களில் ஈடுபட்ட மூன்று இளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இளையர்கள் பலர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக காவல் துறைக்கு அண்மையில் புகார்கள் வந்தன.

இதையடுத்து வடகரை, இளத்தூர், பண்பொழி உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சில இளையர்கள் இருசக்கர வாகனங் களில் போட்டிபோட்டு வேகமாகச் சென்று அதைக் காணொளியாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இது தொடர்பாக 21 முதல் 25 வயதுக்குட்பட்ட மூன்று இளையர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

மூவரும் கைதான நிலையில் செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பரத்குமார் என்பவர் மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதன் பேரில் அவருக்கு ரூ.11000 அபராதம் விதிக்கப்ட்டுள்ளது.

இதற்கிடையே திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சில இளையர் களும் இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி ஐந்து இளையர்களின் இருசக்கர வாகனம் ஓட்டும் உரிமத்தை ரத்து செய்ய காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கைது

தொடர்புடைய செய்திகள்