சென்னை: தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் விலை திடீரென உயர்ந்துள்ளது.
200 மி.லி ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.50 காசு உயர்ந்து வியாழக்கிழமை முதல் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளில் வரும் ஆவின் பால் வியாழக்கிழமை முதல் ஊதா நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே ஆவின் முகவர்கள் மேற்கண்ட விலையின் அடிப்படையில் வங்கியில் பணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மண்டல பொறுப்பாளர்கள் மேற்கண்ட விலையில் பணம் வசூல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.