பேருந்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

பேருந்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

1 mins read
7fd7e786-4169-46e8-8a0e-409a1a0d1d14
மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த ஆடவர் ஒருவர் பேருந்து ஓட்டுநர் ரெஜியை வீரவநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே சரமாரியாக அரிவாளால் முகத்தில் வெட்டினார்.  - படம்: ஊடகம்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இருக்கும் பாபநாசம் பகுதியிலிருந்து நெல்லை புதிய பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து ஒன்று புதன்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தை ரெஜி என்பவர் ஓட்டினார். பேருந்து கல்லிடைக்குறிச்சியைத் தாண்டி சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் பேருந்தை வழிமறித்தனர். அவர்களில் இரண்டு பேர் பேருந்தில் ஏறினர். அப்போது பேருந்து ஓட்டுநருக்கும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த அந்த ஆடவர், பேருந்து ஓட்டுநர் ரெஜியை வீரவநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே சரமாரியாக அரிவாளால் முகத்தில் வெட்டினார்.

இதனைத் தடுக்க வந்த நடத்துநரையும் அந்த ஆடவர், தாக்கியதாகவும் இதனால் அவருக்கும் இலேசான காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதனைத் தொடர்ந்து, இருவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வீரவநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பாபநாசம் பணிமனையைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால், அப்பகுதியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. போக்குவரத்துக் கழக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்