எரிவாயுக் கலன் விலையைக் குறைத்த எண்ணெய் நிறுவனம்

எரிவாயுக் கலன் விலையைக் குறைத்த எண்ணெய் நிறுவனம்

1 mins read
513b090d-4340-4598-8b96-e5df71e08bbd
ஒரு எரிவாயுக் கலனின் விலை ரூ.1,942ஆக குறைந்துள்ளது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயுக் கலன் விலை ரூ.57 குறைந்துள்ளது. ரூ.1,999.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயுக் கலனின் விலை ரூ.57 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதன் மூலம் ஓர் எரிவாயுக் கலனின் விலை ரூ.1,942 ஆக குறைந்துள்ளது. கடந்த இரு மாதங்களாக வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயுக் கலனின் விலை அதிகரித்து வந்த நிலையில், எரிவாயுக் கலனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது வணிகர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்