கால்களில் பிரச்சினை: செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பரிசோதனை

1 mins read
7a98689c-2c40-4473-a09b-df458b4dce09
செந்தில் பாலாஜி. - படம்: ஊடகம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதை அகற்ற சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் அதைக் குறைக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் தெரிய வந்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து பரிசோதனை முடிவுகளும் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவ்வப்போது தனது கால்கள் மரத்துப்போவ தாகவும் கால் நரம்பில் அடிக்கடி வலி ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவருக்கு கூடுதல் பரிசோதனைகள் செய்ய முடிவாகி உள்ளது என்றும் பரிசோதனையின் முடிவில் சிகிச்சை முறை குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறியதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதயவியல் பிரிவு மருத்துவர்கள் குழுவும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகவலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்