கார்த்திகை பிறந்தது; அய்யப்ப பக்தர்களின் விரதம் தொடங்கியது

1 mins read
1f413dc5-10a2-4a39-b04e-66269a87adf7
மாலை அணிந்துகொண்ட பக்தர்கள். - படம்: ஊடகம்

சென்னை : கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.

சென்னையில் உள்ள கோவில்களில் மாலை அணிந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கார்த்திகை முதல் நாளன்று அய்யப்ப பக்தர்கள் அதிகாலையிலேயே கோவில்களில் குவிந்தனர். பின்னர், வரிசையில் நின்று மாலை அணிந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவியில் புனித நீராடி பக்தர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்