ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டிய ஒன்று: ஸ்டாலின்

சென்னை: ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய ஒன்றுதான் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனினும், பொறுப்பில்இருக்கும்வரை மக்களாட்சித் தத்துவத்துக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

ஆளுநராக இருப்பவர் மத்திய அரசில் அவருக்குள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி தமிழக அரசுக்கு நிதி பெற்றுத் தரலாம் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஆளுநர் பாலமாகச் செயல்படலாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பல்வேறு மசோதாக்களை ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பிவிட்டது. மேலும், பல்வேறு விளக்கங்களையும் கோரி உள்ளது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நவம்பர் 18ஆம் தேதி (நேற்று) கூட்டப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் ஸ்டாலின் இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது என்றார்.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றித் தர வேண்டும். இது ஆளுநருக்குரிய கடமை. விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். ஒருபோதும் அவர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை.

“தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டையும் மக்களையும் அவமதித்துள்ளார்,” என்று முதல்வர் ஸ்டாலின் குற்றஞ் சாட்டினார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும் நாள்தோறும் யாரையாவது கூட்டி வைத்துக்கொண்டு அவர் வகுப்பு எடுப்பதாகவும் முதல்வர் விமர்சித்தார்.

“வகுப்பு எடுக்கட்டும், ஆனால் தவறான பாடங்களை எடுக்கிறார். அரசின் கொள்கைகள் குறித்து பொதுவெளியில் விமர்சிப்பது சரியல்ல.

“இந்திய நாடு இதுவரை கண்டிராத முன்னோடி திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டதால் தான் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற கதவுகளைத் தட்ட நேர்ந்தது. அரசின் வாதங்களைக் கேட்டு உச்சநீதிமன்றம் பதில் அளித்திருப்பது தமிழக அரசுக்கு கிடைத்த முதல் வெற்றி,” என்றார் மு.க.ஸ்டாலின்.

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநர் மாளிகைக்கு அனுப்ப இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதற்காகத்தான் சட்டமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!