விஜயகாந்த் குறித்த வதந்திகள்: தேமுதிக வேண்டுகோள்

விஜயகாந்த் குறித்த வதந்திகள்: தேமுதிக வேண்டுகோள்

1 mins read
d6ecd5cc-22b3-4cb6-b77e-8d90ab856a6c
விஜயகாந்த். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து வெளிவரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அக்கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

விஜயகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உடல்நலக் குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மேலும், அவ்வப்போது வெளிநாட்டுக்குச் சென்றும் சிகிச்சை பெறுகிறார்.

இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து கடந்த இரு நாள்களாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வந்தன.

இதையடுத்து, தேமுதிக சார்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்