தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவித்தது இலங்கை

தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவித்தது இலங்கை

1 mins read
682737b0-68e0-41de-8bfb-3d7c890845df
ராமேசுவரம் மீனவர்கள் - படம்: ஊடகம்

ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரை அந்நாடு உடனடியாக விடுதலை செய்துள்ளது. அந்த 22 மீனவர்களும் சனிக்கிழமை அன்று கைதாகினர். இதையடுத்து, தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வலியுறுத்தினர். இந்நிலையில், ராமேசுவரம் சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மீனவர்களின் உறவினர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 22 மீனவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் நாட்டுப் படகுகள் மூலம் ராமேசுவரத்துக்கு அழைத்து வரப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, 22 மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனம் ராமதாஸ் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்