சென்னை: உலகச் செம்மொழித் தமிழ்ச் சங்கம் சாா்பில் 2024 ஜனவரி 5ஆம் தேதி அனைத்துலக மாநாடு நடைபெற உள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தூய தாமஸ் கலை அறிவியல் கல்லூரியில், ‘உலகக் கல்வித்திறன் மேம்பாட்டில் தமிழ் மொழியின் பங்கு’ என்னும் தலைப்பில் அந்தப் பல்துறை அனைத்துலக மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து உலகச் செம்மொழித் தமிழ்ச் சங்கத் தலைவா் மெய்யானி பிரபாகரபாபு அறிக்கையில், “உள்நாட்டுத் தமிழறிஞா்கள் மட்டுமின்றி, அமெரிக்கா, சிங்கப்பூா், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த தமிழறிஞா்களும் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிக்கவுள்ளனா்.
“மாநாட்டில் பங்கேற்க விரும்பும் தமிழறிஞா்கள், ஆய்வு மாணவா்கள் போன்றோா் தங்கள் கட்டுரைகளை டிசம்பர் 5ஆம் தேதிக்குள் அனுப்பலாம். இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு 94448 36232, 97100 07577, 81243 42502 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

