தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றினால்தான் அனைவரும் உயர்கல்வி கற்க முடியும்’

2 mins read
f92d8970-e4e2-451f-a02c-3f7bcc08b931
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: கல்வியை ஒத்திசைவுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றினால்தான், மாநிலத்தில் உள்ள அனைவரும் உயர்கல்வி பயில முடியும். இது தமிழகத்துக்கு மட்டுமல்ல. இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை இந்த பல்கலைக்கழகத்துக்குத்தான் உண்டு. முழுக்க முழுக்க மாநில அரசு நிதியுதவியில் செயல்படும் பல்கலைக்கழகம் இது. அதைவிடச் சிறப்பு என்னவென்றால், இந்த பல்கலைக்கழகத்துக்குத்தான், மாநிலத்தை ஆளும் முதல்வரே வேந்தராக இருக்கும் உரிமை உள்ளது. நான் அரசியல் எல்லாம் பேசவில்லை. எதார்த்தத்தைப் பேசுகிறேன்.

இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை இந்த பல்கலைக்கழகத்துக்குத்தான் உண்டு.

முழுக்க முழுக்க மாநில அரசு நிதியுதவியில் செயல்படும் பல்கலைக்கழகம் இது. அதைவிட சிறப்பு என்னவென்றால், இந்த பல்கலைக்கழகத்துக்குத்தான், மாநிலத்தை ஆளும் முதல்வரே வேந்தராக இருக்கும் உரிமை உள்ளது. நான் அரசியல் எல்லாம் பேசவில்லை. எதார்த்தத்தைப் பேசுகிறேன்.

“இப்படி முதல்வர்களே வேந்தர்களாக இருந்தால்தான், பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும், வளரும். மற்றவர்கள் கையில் இருந்தால், அதன் நோக்கமே சிதைந்து போய்விடும் என்று நினைத்துதான், 2013ஆம் ஆண்டே, இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை முதல்வர்தான் வகிக்க வேண்டும் என்று அப்போது ஆட்சியில் இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதற்காக அவரை மனதார பாராட்டலாம். நானும் மனமுவந்து பாராட்டுகிறேன்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

“ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால்தான் அனைவருக்கும் கல்வி, உயர் கல்வி கிடைக்கும். நான் தமிழகத்துக்காக மட்டும் இதை கூறவில்லை, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் இவ்வாறு கூறுகிறேன். கல்விதான் ஒருவருடைய நியாயமான சொத்து. அந்த கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது என்பதுதான், நமது திராவிட மாடல் ஆட்சியினுடைய கொள்கை,” என்று அவர் பேசினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்