சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பெங்களூருவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அங்கு அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
பெங்களூருவில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளை வருவாய்த்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும்படி காணப்பட்ட இரண்டு பெண்களிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவர்களிடம் இருந்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கத்தைக் கைப்பற்றினர். அவர்கள் இருவரையும் கைதுசெய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


