ஆபாசமாகப் பேசினால், பாடினால் சிறை: காவல்துறை எச்சரிக்கை

ஆபாசமாகப் பேசினால், பாடினால் சிறை: காவல்துறை எச்சரிக்கை

1 mins read
16557150-0f83-4435-b910-39ef5e6c1dcd
தமிழக காவல்துறை. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: பொதுவெளியில் ஆபாசமாக பேசினாலோ, பாடினாலோ மூன்று மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் ஒழுங்கீனமான எந்த ஒரு நடவடிக்கையும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என காவல் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இத்தகைய குற்றத்திற்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள காவல் துறை, பொதுவெளியில் நாகரிகமாக நடந்து கொள்வது அனைவரின் பொறுப்பு மட்டுமல்ல கடமையும் கூட என்று தெரிவித்துள்ளது.

“நாம் சாதாரணமானவை என்று நினைக்கும் செயல்களும் கூட தண்டனைக்குரியவையாக இருக்கக் கூடும். எனவே மிகுந்த கவனம் தேவை,” என காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் ஒன்றில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
காவல்துறை