சளி, காய்ச்சல்: முகக்கவசம் அணிய அறிவுறுத்து

சளி, காய்ச்சல்: முகக்கவசம் அணிய அறிவுறுத்து

1 mins read
9709e245-26a0-4787-b33e-3bef6e567437
முகக்கவசம் அணிய அறிவுறுத்தி உள்ளார் கோவை மாவட்ட ஆட்சியர். - படம்: ஊடகம்

கோவை: சளிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கோவையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

கோவையில் நாள்தோறும் குறைந்தபட்சம் 50 பேராவது சளிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் புறநோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் சிறார்களும் முதியவர்களும் எளிதில் பாதிக்கப்படலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பொது மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கோவை ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்