தண்டவாளத்தில் பாறைகள்: ஊட்டி ரயில் சேவை மீண்டும் ரத்து

தண்டவாளத்தில் பாறைகள்: ஊட்டி ரயில் சேவை மீண்டும் ரத்து

1 mins read
9855e06e-9ea5-4db3-bfee-001e36f6a139
கனமழை காரணமாக அரசுப் பேருந்து மீது பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது. மரத்தை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். - படம்: தமிழக ஊடகம்

நீலகிரி: தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாள்களுக்கு மேலாக தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மேட்டுப்பாளையம் பகுதிகளில் கனமழை பெய்யும் போது, மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்படுவதும் இதனால் நீலகிரி மலை ரயிலின் சேவை நிறுத்தப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

உதகை மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு நவம்பர் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையும் மீண்டும் நவம்பர் 9ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்த நிலையில் 10 நாள்களுக்குப் பின்னர் நவம்பர் 19ஆம் தேதி முதல் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியது.

இதனிடையே, ரயில் தண்டவாள வழித்தடத்தில் பாறைகள் சரிந்துள்ளதால் சீரமைப்பு பணிகளுக்காக ரயில் சேவை மீண்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பணிகள் நிறைவடைந்ததும் நவம்பர் 25ஆம் தேதி மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்