சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விஜயகாந்த் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் அனைத்து உடல் செயல்பாடுகளும் நிலையாக உள்ளது என்றும் அவர் மேலும் சில நாள்களுக்கு கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை தெரிவித்தது.
அதன் பிறகே அவர் வீடு திரும்புவார் என்றும் அதன் பின்னர் தனது வழக்கமான நடவடிக்கைகளை அவர் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மருத்துவமனை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருப்பதால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் விஜயகாந்த். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்னர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தேமுதிக தொண்டர்கள் கவலையில் உள்ளனர்.

