போதைப்பொருள்: 15 நாள்களில் 248 பேர் அதிரடிக் கைது

1 mins read
86ad18d0-35bf-423d-9deb-70ae950d15ae
போதைப்பொருள்கள். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் போதை பொருள் விற்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 15 நாட்களில் மட்டும் 248 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள 783 கிலோ கஞ்சா 10 கிராம் கோகெய்ன், 85 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஆகியவை இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் இந்தக் கைது நடவடிக்கை நீடிக்கும் என்றும் அப்பிரிவுகளின் கூடுதல் டி.ஜி.பி, மகேஷ் குமார் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்