சென்னை: விஜயகாந்த் உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விஜயகாந்திற்கு பொறுத்தப்பட்ட செயற்கை சுவாசக்கருவி அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் இயற்கையாகச் சுவாசிக்கத் தொடங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றுள்ளார் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக்கருவியுடன் விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

