தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுரை: தண்டோரா போட்டு மீட்கப்பட்ட நகைகள்

1 mins read
30c4a2c1-b58c-4dca-973c-d3ba7609bfd9
தங்க நகைகள். - கோப்புப்படம்: ஊடகம்

மதுரை: மதுரையில் திருட்டுப்போன நகைகள் ஊர் வழக்கப்படி தண்டோரா போட்டு மீட்கப்பட்டன.

அங்குள்ள பொக்கம்பட்டி என்ற சிற்றூரைச் சேர்ந்த ராகவன் தம்பதியர் இரு நாள் களுக்கு முன்பு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது பீரோவில் வைத்திருந்த 26 பவுன் நகைகளும் 21,000 ரொக்கப் பணமும் திருட்டுப் போயிருந்தன.

இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்ட போதும் ஊர்வழக்கப்படி தண்டோராவும் போடப்பட்டது. அதன் பின்னர் அவ்வூரில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கும் உறைகள் வழங்கப்பட்டன. பின்னர் அன்று நள்ளிரவு ஊர் மத்தியில் இரண்டு பெரிய அண்டாக்கள் வைக்கப்பட்டன.

ஊரைச் சேர்ந்த யாரேனும் நகைகளைத் திருடி இருந்தால் சிக்கல் இன்றி அவற்றைத் திருப்பி அளிக்கவே இந்த ஏற்பாடு. அதன்படி மறுநாள் காலை அண்டாவில் உள்ள உறை களைப் பிரித்துப் பார்த்தபோது ஓர் உறையில் நகைகளும் ரொக்கப் பணமும் காணப்பட்டன.

ஊர் பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் இவ்வாறு நகைகள் மீட்கப்பட்டது வியப் பளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் நகை களும் பணமும் ராகவன் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்