வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்

1 mins read
73864d70-bf44-4cc4-b9ea-80340211ad61
இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கத்துக்காக 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக 15.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்தகவலை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதன் மூலம் மொத்தம் 9.13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர் என்றும் 1.21 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளனர் என்றும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி கூறினார்.

முன்னதாக நவம்பர் 4,5 ஆம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அச்சமயம், 4.07 லட்சம் பேர் தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்திருந்தனர். மற்ற கோரிக்கைகளுடன் சேர்த்து மொத்தமாக ஆறு லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டிருந்தன.

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகின்றன.

குறிப்புச் சொற்கள்
வாக்காளர்