சென்னை: தொழில்துறையில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்காவைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் காணொளி மூலம் பங்கேற்ற அவர், வளர்ச்சித் திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் திமுக அரசு உறுதியாக உள்ளது என்றார்.
முதற்கட்டமாக 400 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுவதாக குறிப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்வரும் 2028ஆம் ஆண்டுக்குள் ரூ.2,440 கோடி முதலீட்டில் 29,500 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யபட உள்ளது என்றார். “ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர் வரும் ஜனவரியில் உலக முதளீட்டாளர்கள் மாநாடு சென்னையில் சிறப்பாக நடைபெற உள்ளது,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.