சென்னை: பிரபல நாதஸ்வர கலைஞர் எம்.பி.என். பொன்னுசாமி காலமானார். அவருக்கு வயது 90.
நடிகர் சிவாஜி கணேசன் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘தில்லானா மோகனாம்பாள்’. இதில் ஒலித்தது பொன்னுசாமியின் நாதஸ்வர இசைதான்.
தனது சகோதரர் எம்.பி.என் சேதுராமனுடன் இணைந்து அப்படத்துக்கு அருமையான இசையை வழங்கி இருந்தார்.
அந்தப் படம் வெளியான பிறகு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் விழாக்களில் பொன்னுசாமியின் நாதஸ்வர இசை நிச்சயம் ஒலிக்கும் என்று அனைவரும் நம்பினர். அந்த அளவுக்கு ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இருந்தார்.
இவருக்கு தமிழக அரசு 1977-ல் கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. மேலும் அதே ஆண்டில் கிருஷ்ணகான சபாவின் சங்கீத சூடாமணி விருதையும் பெற்றார்.

