விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை: தேமுதிகவினர் பிரார்த்தனை

விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை: தேமுதிகவினர் பிரார்த்தனை

1 mins read
249967f3-150e-4ec2-9060-d350b9c3db15
தேமுதிக தலைவர் விஜயகாந்த். - படம்: ஊடகம்

சென்னை: விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து அவருக்கு 14 நாள்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

“விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னதாக நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும், அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சை தேவைப்படுகிறது,” என மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தத் தகவலைக் கேட்டு கவலையடைந்துள்ள தேமுதிகவினரும் விஜயகாந்தின் ரசிகர்களும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணம்பெற வேண்டும் என்று பிரார்த்தித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
உடல்நலம்