சென்னையில் கனமழை: 8 விமானங்கள் ரத்து; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் டிசம்பர் 3 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதன்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. அதையடுத்து சென்னையின் பல பகுதிகளில் சாலைப்போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் புதன்கிழமை அதிகாலை முதலே மழை பெய்தது. மாலை 5 மணிக்கு மேலாக தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் அமைந்திருக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும், நகரின் முக்கிய சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்தது.

அடுத்து வரும் நான்கு நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இரவு தாண்டியும் மழை நீடித்த நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பல்கலைக்கழத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை கொரட்டூர், பாடி, அம்பத்தூர், முகப்பேர் போன்ற பகுதிகளிலும், எழும்பூர், கோடம்பாக்கம், தியாகராயநகர், அண்ணா நகர், திருவொற்றியூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல இடங்கள் மழைநீர் சூழ காட்சி அளித்தன.

அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு தொலைபேசியில் மழைப் பாதிப்பு குறித்த விவரங்களை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களின் அழைப்புகள் உடனுக்குடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த நிலையத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை மேற்கொண்டு அதிகாரிகளிடம் மழைப் பாதிப்பு நிலவரம் பற்றி கேட்டறிந்தார்.

8 விமானச் சேவைகள் நிறுத்தம்

இதனிடையே அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து அந்தமான், ஹைதராபாத், ஹூப்ளி, டெல்லி, மும்பை செல்லும் விமானங்கள் உட்பட 15 விமானங்கள் காலதாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை நீரை வெளியேற்றும் பணியில் 21,000 ஊழியர்கள்

இந்த நிலையில், சென்னையின் பல பகுதிகளில் மழைப் பாதிப்புகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தொடர் மழையால் ஒரு சில தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 21 ஆயிரம் ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

“22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் அகற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. முதல் அமைச்சரின் உத்தரவின்படி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் களத்தில் செயலாற்றி வருகின்றோம்.” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

அத்துடன், வங்கக்கடலில் உருவாகவுள்ள ‘மிக்ஜம்’ புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது என்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வலியுறுத்தி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முதல் கட்டமாக முடிக்கப்பட்ட பிறகு இப்போது தான் ஓரளவு கனமழை பெய்துள்ளது. இந்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீரை வெளியேற்ற புதிதாகக் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் திணறுகின்றன என்பதுதான் உண்மை.

அதில், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படுவதற்கு முன்பாக ஒவ்வொரு பகுதியிலும் எந்த அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதோ, இப்போதும் அதே அளவுக்குத்தான் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

எனவே, மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மழை நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அந்த அறிக்கையில் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!