பாபர் மசூதி இடிப்பு தினம்: கோவையில் பலத்த பாதுகாப்பு

1 mins read
e7315f7d-e864-43ce-8c19-593697e86920
பாதுகாப்பு பணியில் காவல்துறையினர். - படம்: தமிழக ஊடகம்

கோவை: பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதி நாடு முழுவதும் கறுப்பு தினமாக இஸ்லாமிய அமைப்பினர் அனுசரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

குறிப்பாக, உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டது.

கோவை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் முழுமையான சோதனைக்குப் பின்னர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் ரயில் நிலைய நடைபாதை மற்றும் கார் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

கோவை மாநகர் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.